பூநகரி விதானை இராஜகோபலின் திருவிளையாடல்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
நேற்று முன் தினம் கெளதாரிமுனை மற்றும் பரமன் கிராய் பகுதிகளுக்கு எமது குழு சென்று மக்களை சந்திக்க பொழுது கிராம அலுவலர் இராஜகோபல் பற்றிய அறியக்கூடியதாக உள்ளது அவை பின்வருமாறு
1 மணல்காணிகள் விற்பனைக்கு தரகராக செயற்படல்
2 மணல்வியாபாரி ஒருவருடன் நெருக்கமான உறவை கொண்டிருத்தல்
3 அரச உயர் அதிகாரி ஒருவருக்கு சொந்தாமான தென்னம்காணியினை பராமரிப்பதன் மூலம் மாதம் குறிப்பட்ட தொகையினை அதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றார்
4 வன்னியசிங்கத்துடன் இணைந்து பல உரிமை கோரப்படாத தனியார் காணிகளை கள்ள உறுதிகள் தயாரித்து விற்பனை செய்வது
5 மக்கள் அரசகாணியை துப்பரவு செய்தால் துப்பரவு செய்யும் காணியில் ஒரு பகுதியை தனக்கு தரும்படி கேட்பது
கெளதாரிமுனை பகுதியில் பாதை சீரின்மையால் பல அதிகாரிகள் அப்பகுதியில் கடமையாற்றுதில்லை ஆனால் கோபலு விரும்பி அப்பகுதியில் கடமையாற்றுவதற்கான மர்மமுடிச்சு நேற்றுடன் அவிழ்ந்து விட்டது.


