புதினங்களின் சங்கமம்

டக்ளஸ் பிடிபட்டது சின்ன விசயத்திற்கே…. அரசாங்கம் சீன் போடுகின்றதா?

25 வருடங்களுக்கு முன் துணைப்படையாக ஆமியுடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி.டி.பியின் பொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டில் டக்ளஸ் கைது செய்யப்படுவது “ஊசி போகும் இடம் பார்ப்பார் உலக்கை போகுமிடம் பாரார்” என்ற பழமொழிக்கு அமைய டக்ளஸ்தேவானந்தா தரப்பினர் செய்த பாரிய குற்றங்களை விடுத்து சிறிய செயற்பாட்டுக்காக கைது செய்து வடக்கு பகுதியில் உள்ள டக்ளஸ் தேவானந்தா மீது வெறுப்புள்ள தரப்பினரை மகிழ்விக்க சீன் போடும் செயலே என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.