புதினங்களின் சங்கமம்

பொலிசாரால் தாக்கப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ் போனா வைத்தியசாலையில் அனுமதி..!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது தவத்திரு வேலன் சுவாமிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். பின்னர் பிற்பகல் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி பொலிஸாரால் முற்படுத்தப்பட்டிருந்தவேளை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.