யாழில் பெண் சுற்றுலாப் பயணிகளுடன் அங்க சேட்டை புரிந்து உடைமைகளை கொள்ளையிட முயன்ற காவாலிகள்!!
யாழ் காரைநகருக்கு சென்ற தென்பகுதி பெண் சுற்றுலாப் பயணிகளுடன் பாலியல் சேட்டை விட்ட காவாலிகளால் குறித்த சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Haman Hill சென்று திரும்பிய சுற்றுலாப்பயணிகளை இடை மறித்து அவர்களுடன் தகாத முறையில் நடந்து, அவர்களின் உடைமைகளை இந்தப் புகைப்படத்தில் காணப்படும் காவாலியும் அவரது நண்பர்களும் அபகரிக்க முயன்றுள்ளான். அப்பகுதியால் வந்தவர்கள் இவர்களின் நடவடிக்கையை தடுப்பதற்கு முயன்ற போத இவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

