யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் நித்திலவர்ணன் மனைவிக்கு அடித்தாரா? மனைவியான ஆசிரியை நிசாந்தினி தீ மூட்டி பலியானாரா?
யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் தலைவரராணசிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்களின் மனைவியான ஹாட்டில் கல்லுாரி ஆசிரியை நிசாந்தினி தீ விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் குறித்த சம்பவம் விபத்து அல்ல என அயலவர்கள் சிலர் பேக் ஐடிகள் மூலம் எமக்கு தகவல்களை அனுப்பியு்ளளார்கள். அத்துடன் இது தொடர்பக விசாரணைகள் செய்ய வேண்டும் எனவும் கோருகின்றார்கள்.
நித்தியவர்ணனும் மனைவியும் கொழும்புக்கு சென்று திரும்பி அதிகாலை வீட்டுக்கு வந்த பின்னா அங்கு இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே குக்குரல் கேட்டதாகவும் அவர்கள் தகவல்களை அனுப்பியுள்ளார்கள்.
இவர்கள் அனுப்பிய தகவல்களை சரி பார்க்க எமது புலனாய்வு ஊடகவியலாளர்கள் முற்பட்ட போது அயலவர்கள் யாரும் அவ்வாறான தகவல்களை எமக்கு தருவதற்கு முற்படவில்லை. அத்துடன் விரிவுரையாளர் மற்றும் அவரது மனைவி நிசாந்தினி ஆகியோர் தமது வீட்டுக்கு வாகனம் வருவதற்கான பாதையை அகலப்படுத்துவதற்காக எடுத்த நடவடிக்கை மூலம் அயலவர்களுடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும் அயலவாகள் சிலரின் காணி வேலிகளை பிடுங்கி பாதையை அகலமாக்க நடவடிக்கை எடுத்ததன் காரணமாக அயலவர்களுடன் இவர்கள் முரண்பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் நிசாந்தினியின் உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள் தீ விபத்தால் ஏற்பட்டவையாக இருக்காது எனவும் தனக்குத் தானே எரிபொருள் ஊற்றி எரித்தமைக்கான சாத்தியக்கூறுகள் ( முற்பகுதி, தலைப்பகுதி எரிகாயங்கள்) காணப்படுவதாகவும் நேரில் சடலத்தை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

