புதினங்களின் சங்கமம்

யாழ் மட்டுவிலில் ஜெயசூரியா பரிதாபகரமாகப் பலி!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி பயணித்த இளம் குடும்பஸ்தர் வலிப்பு காரணமாக மயங்கி விழ்ந்து தலையில் காயமடைந்துள்ளார்,

குறித்த இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜெயசூரியா (வயது-33) என்ற 2 வயது பெண் குழந்தையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்த குடும்பஸ்தரின் இறுதிக்கிரியைகள் இடம் பெற்றது.