புதினங்களின் சங்கமம்

பதவி மோகங்களிற்குப் நாளை பலியாகுமா துணைவேந்தர் தேர்தல்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் தெரிவு நாளை (09.12.2025) நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுவரை காலமும் அரசியல்வாதிகளின் ஒத்தாசையுடன் கற்றறிந்த தமிழ்க் கல்விப்புலத்தின் தலைமைத்தும் தேர்வு செய்யப்பட்டு வந்த அதே நிலை தொடருமா? முடிவிற்கு வருமா என்ற எதிர்பார்க்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் எழுந்துள்ளது.

கடந்த காலங்களைப் போலவே அரசியற்கட்சிகளுடன் தொடர் தொடர்பாடல்களில் ஈடுபட்டு தமது பதவிக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ளும் குழுவொன்றின் கைகளில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு சிக்குண்டுள்ளமை வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.

துணைவேந்தரை வாக்களித்து தேர்வு செய்யும் அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகப் பேரவையில் உள்வாரி மற்றும் வெளிவாரி உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் உள்வாரி உறுப்பினர்களை விடவும் ஒருவர் அதிகமாக நியமிக்கப்படும் வெளிவாரி உறுப்பினர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைப் பொறுத்த வரையில் வெளிவாரி உறுப்பினர்களின் நியமனமென்பது அரசியல் தலையீடுகள் மற்றும் சிபரிசுகளில் நியமனம் செய்யப்படுவதாகவே உள்ளது. அடுத்தடுத்த துணைவேந்தர் தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல் செல்வாக்குள்ளவர்களினால் பரிந்துரைக்கப்படுபவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது கூட துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடும் பீடமான்றின் பீடாதிபதி மற்றும் அவரின் நியமனம் ஊடாக பிரதித் துணைவேந்தர் பதவியை இலக்கு வைத்துச் செயற்படுவர்களின் பரிந்துரையில் வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகின்றது.

கடந்த காலங்களில் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் கோலாச்சிய முன்னாள் அமைச்சருடன் இணைந்து செயற்பட்ட குறித்த தரப்புக்கள் அதன் பின்னர் நல்லாட்சிக் காலம் மற்றும் அதனையடுத்த வந்த காலங்களில் அரசுடன் நெருங்கிப் பழகிய தமிழ்க் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தங்கள் உறவுகளைப் பேணி வந்தனர்.

எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சாரங்கள் செய்து வந்தனர். எதிர்பாராத விதமாக தேர்தல் முடிவுகளில் அனுர அலை வீச தற்போது ஆட்சியில் இருக்கும் தரப்பினரிற்கு ஐந்தாண்டு காலத்திற்கான விசுவாமுடையவர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் ஆட்சியில் உள்ள மற்றும் கோலோச்சும் தரப்புக்களுடன் தங்கள் உறவுளைப் புதுப்பித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தாங்கள் எண்ணுபவற்றை நிகழ்த்துவதற்குத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலியாகிப் போகுவதென்னமோ தமிழ்க் கல்விப் புலம் தான் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறு விசுவாசிப்பசர்களில் ஒருவருக்கு பனை அபிவிருத்துச் சபையில் உறுப்பினராக நியமனம் வழங்கப்பட்டதும் பின்னர் அவர் அதிலிருந்து விமர்சனங்களின் பின்னர் வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான தரப்பினரின் சிபாரித்து வழங்கிய பட்டியிலிலிருந்து நியமிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தற்போது பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் நாளைய தினம் நடைபெறவுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் எவ்வாறு செயற்படப் போகின்றார்கள் என்பது வலுத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறித்த வெளிவாரி உறுப்பினர்களில் விஞ்ஞான பீடத்தின் துறைத் தலைவர்களில் ஒருவரின் சகோதரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையும், அவர் துணைவேந்தர் போட்டியிலுள்ள பீடாதிபதியின் மச்சாள் முறை உறவுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடும்பமொன்றிலிருந்து இருபவர் பேரவை உறுப்பினர்களாகவுள்ளனர்.

1. உதாராணத்திற்கு குறித்த துறைத்தலைவர் முறைகேடொன்றில் ஈடுபட்டிந்தால், எவ்வளவு தூரம் பேரவையில் உறுப்பினராகவுள்ள அவராது சகோததரியும், உறவுமுறை பீடாதிபதியும் செயற்படுவார்கள்.
2. நாளைய துணைவேந்தர் தேர்தலில் அந்த உறவுமுறைக்காரர் யாருக்கு வாக்களிப்பார் எனும் கேள்வியும் எழாமலில்லை.

அரசியல்வாதிகளில் பாதம் பணிந்து வாழும் தமிழ்க் கல்விப்புலத்தை யார் தான் காப்பாற்றுவார்கள்?