புதினங்களின் சங்கமம்

லண்டன் தமிழ்ப் பெண்ணுக்கு யாழில் நடந்த கொடுமை!! பிக்பொக்ஸ் நிகழ்ச்சியால் வந்த வினை!! இளைஞர்களால் ஏற்பட்ட கொடுமை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் லண்டனிலிருந்து புலம்பெயர் தமிழ் பெண்ணொருவர் பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கிருந்து அவர் சிறிய கைப்பையை கொழுவிக்கொண்டு அயலில் கடற்கரை மற்றும் பல இடங்களுக்கு சென்றுவருவது வழமை, அப்போது ஒருநாள் சென்று வரும்போது அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சிலர், லண்டனிலிருந்து வந்தீர்களா அல்லது பிக்பாஸ் வீட்டிலிருந்தா வந்தீர்கள் என பலவாறு கேலி செய்து பேசியுள்ளனர்.

அப்போது அந்தபெண் பதிலுக்கு பேச, அந்த இளைஞர்கள் பெண்ணை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதனை கேள்விப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சிலர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குவாதம் மோதலாக மாறியது, இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு நிலவிய நிலையில் அப்பகுதி மக்களால் சமரசப்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது