புதினங்களின் சங்கமம்

இன்றைய இராசிபலன்கள் (01.10.2024)

மேஷம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

சவால்களில், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அழகும் இளமையும் கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கன்னி

கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். சகோதரர் வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். எதிர்பாராத திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சிறப்பான நாள்

விருச்சிகம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உங்களை தவறாக நினைத்துக்கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். வியாபாரத்தில் சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

தனுசு

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன ரக மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கும்பம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x