முடக்கப்பட்டது நுவரெலியா மாவட்டம்!
இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொதுமக்கள் நடமாட்டம் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

