சஜித்திற்காக யாழ்ப்பாணத்தில் நடந்தது இதுதான்; என்னவென்று சொல்லுறது!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் – சுதுமலை அம்மன் ஆலயத்தில் நேற்று இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவாளர்களால் இந்த பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.எம்.விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

