யாழில் நடந்த விபரீதம்! தன்னைத் தானே சுட்டு இராணுவ வீரர் தற்கொலை
பலாலி இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ வீரரொருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே
சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாலி இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
உயிரிழந்த இராணுவ வீரரின் விபரங்கள் தொடர்பில் இது வரையில் எவ்வித தகவல்களும்
வெளியிடப்படவில்லை.

