வீட்டைச் சுற்றி CCTV. கடிக்க நாய்கள்!! பெண் உறுப்பில் சொருகிய போதைபொருள் !! சிங்களத்தி சிக்கியது எப்படி?
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்திவரும் அசித என்பவரின் உறவினரான பட்டா அக்கா என்ற 26 வயது பெண் 10571 மில்லிகிராம் ஹெரோயின், போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 22 இலட்சத்து 47,450 ரூபாவுடன் பாணந்துறை மகாவில பகுதியில் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் மஹாவில மதுப்பிட்டிய வீதியில் வசிக்கின்றார்.
மஹாவில மடுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை பெண் பொலிஸார் சோதனையிட்ட போது, அவரது அந்தரங்க உறுப்புக்குள் சூட்சுமமாக போதைப்பொருள் பொதியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதேவேளை, குடு சலிந்துவின் போதைப்பொருள் வலையமைப்பில் இயங்கிய இந்தப் பெண்ணின் தந்தை, கணவர் மற்றும் மூத்த சகோதரர் இன்னும் பொலிஸ் காவலில் உள்ளனர்.
முன்னதாக கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தியமைக்காக இந்த பெண்ணுக்கு எதிராக பாணந்துறை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலுடன் குடும்பமே தொடர்புபட்டுள்ளதால், வீட்டுக்கு சோதனைக்கு வரும் பொலிசாரை கடிக்க, நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 4 கொடூரமான நாய்கள் அந்த வீட்டில் வளர்க்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசார் வருவதை தூரத்திலேயே அவதானிக்க சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பொலிசார் உடனடியாக வீட்டுக்குள் நுழைவதை தடுக்க வீட்டைச் சுற்றியுள்ள சுவரில் இரும்பு அமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை பின்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.

