புதினங்களின் சங்கமம்

டெங்கு காய்ச்சலினால் 23 வயது பல்கலைக்கழக மாணவி மரணம்.!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று (16) காலை உயிரிழந்துள்ளார்.மானெல் உயன, மபுதுகல, பொருவடந்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஹாசினி பாக்யா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 11ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அதன்பின், தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு என உறுதி செய்யப்பட்டது.

ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண் இன்று காலை 10.30 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்தார்.இறக்கும் போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்.