அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் யாழில் ஒருவர் படுகாயம்!!
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் ஏ – 09 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல அச்சகம் ஒன்றின் நிர்வாகி படுகாயம் அடைந்துள்ளார்.
ஏ – 09 நெடுஞ்சாலையில் நீர் வழங்கும் நீர் குழாயை சீரமைப்பதற்காக அழகப்பட்ட குழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட மண் அந்தப் பகுதியிலேயே குவிக்கப்பட்டதுடன் அது சரியான முறையில் அடையாளப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த மண் மேட்டுடன் மோதுண்டு விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
சம்பவத்தில் ஜீவன் அச்சத்தின் நிர்வாகியான கிருஸ்ணபிள்ளை றேணுசன் என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.
அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடே விபத்துக்கு காரணம் என்று அங்கிருந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

