புதினங்களின் சங்கமம்

நல்லுார் பகுதி கோவிலில் ஆமிக்காரன்கள் செய்யும் அலங்கோலம்!! (Photos)

யாழ். நல்லூர் நாயன்மார்கட்டு வெயிலுகந்தப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத்தினர் சப்பாத்துடன் ஆலயத்திற்குள் பிரவேசித்து ஆலயத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்து வருகின்றனர்.

குறித்த ஒளிப்படக் காட்சிகள் எமது செய்திச் சேவைக்குப் பிரத்தியேகமாக கிடைத்துள்ளன.

தமது தொலைபேசி மின்னேற்றுவதற்காகவும், இளைப்பாறுவதற்காகவும் குறித்த இராணுவத்தினர் மேற்படி ஆலயத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சப்பாத்துடன் இராணுவம் ஆலயத்திற்குள் செல்வது அடியவர்கள் பலருக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் அச்சம் காரணமாக இந்த விடயத்தைப் பெரிதுபடுத்தத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தவறு என்பது தெரிந்தும் செய்யும் இத்தகைய செயற்பாடுகளால் ஆலயத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?

பெளத்தக் கடவுளான புத்தரையோ, பெளத்த மத சின்னத்தையோ அவமதித்தால் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனக் குரல் கொடுப்பவர்கள்
ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் நல்லூரில் செயற்படும் இராணுவத்திற்கு என்ன தண்டனை பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

Image may contain: one or more people, people standing, shoes and outdoorImage may contain: one or more people, shoes and outdoor