புதினங்களின் சங்கமம்

இலங்கையில் தொடரும் கொரோனா பலியெடுப்பு ஆயிரத்தை நெருங்கியது!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் பலர் இன்று உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்கள் 17 பேர் மற்றும் ஆண்கள் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக பதிவாகியுள்ள மரணங்களின் எண்ணிக்கை 2985 ஆக உயர்வடைந்து 3ஆயிரத்தை நெருங்கியுள்ளது.