புதினங்களின் சங்கமம்

கொழும்பில் புடுக்கு கண்ணாவை சுட்டுக் கொன்றதின் பின்னணியில் யாழ்ப்பாணக் காவாலிகளா? அதிர்ச்சித் தகவல்கள்

கொழுமபு கொட்டாஞ்சேனைப் பகுதியின் புடுக்கு கண்ணா என அழைக்கப்படும் 43 வயதான புஸ்பராஜ் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் யாழ்ப்பாணத்தில் செயற்படும் போதைப்பொருள் கடத்தும் ரவுடிகளும் காவாலிகளும் தொடர்புபட்டுள்ளார்கள் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பல கொலை, கொள்ளைகளைச் செய்து வந்த பிரகாஜ் என்பவன் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்று தமிழ்நாட்டு திருச்சியில் உள்ள அகதி முகாமில் ஹரிஸ் என்ற பெயருடன் செயற்பட்டு வருகின்றான். இவன் கொழும்பு கொச்சிக்கடை சிரான் என்ற போதைப்பொருள் வியாபாரியூடாக மொத்தமாக போதைப்பொருளை வாங்கி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளைக் கடத்தி பெரும் மாபியாவாக உருவாகியுள்ளான். இவனுடன் சேர்ந்து கைதடியைச் சேர்ந்த சந்திரா அகில்ராஜ் மற்றும் அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த கனி என்று அழைக்கப்படும் கனீஸ்வரன் மற்றும் பிரான்சில் வாழும் கொலைக் குற்றவாளி சன்னாவின் அண்ணன் அண்ணன் சர்மி மற்றும் சன்னாவின் தம்பி வினோ ஆகியோர் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விநியோகிக்கும் மற்றம் பல்வேறு கொடூர சம்பவங்களி்ன பின்னணியில் உள்ளதாகத் தெரியவருகின்றது. நேற்று முன்தினம் கொட்டாஞ்சேனையில் சுட்டுக்கொல்லப்பட்ட புஸ்பராஜின் கொலைக்கும் இவர்களே உதவியுள்ளார்கள் என தெரியவருகின்றது. இந் நிலையில் வத்தளையில் கைதடியைச் சேர்ந்த சந்திரா அகில்ராஜ் துப்பாக்கியுடன் பிடிபட்டுள்ளான். சன்னாவின் சகோதரர்களின் உதவியுடன் அவர்களின் நண்பர்கள் ஊடாக விந்தன் என்பவனிடம் கார் ஒன்றை வாங்கி அமல்ராஜிக்கு கொடுத்துள்ளார்கள். அந்த காரும் பொலிசாரால் கைப்பற்றப்ப்ட்டுள்ளது. அளவெட்டிக் கனியிம் மேலும் பல துப்பாகிகள் உள்ளது எனவும் இவனிடம் மேலும் பல துப்பாக்கிகள் உள்ளன எனவும் இவன் மல்லாகம் பகுதியில் ஒருவனை வெட்டிய வழக்கில் 4 வருடங்கள் சிறைக்குள் இருந்தவன் என்பதும் குறிப்படத்தக்கது. ஆனைப்பந்தியில் உள்ள HM பிறதர்ஸ் கார் விற்பனை நிலையத்தின் முதலாளியான காவாலி யோகேந்திரன் கஜன் என்பவனும் கனியுடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தல்கள் மேற்கொண்டு வருகின்றான்.

துப்பாக்கியுடன் பிடிபட்ட அகில்ராஜ்

சண்ணாவின் தம்பி வினோ