புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மாணவர்களின் பணத்தை திருடிய அதிபர் கருணாகரன்!! பிரதம மந்திரி செயலகத்தில் முறைப்பாடு!

முல்லத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பாடசாலை சேவைக்காலத்தில் தாய் தந்தை இழந்த மாணவனுக்கு யோகா அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட நிதி மோசடி, பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டதென காட்டப்பட்ட தொகை வைப்பிலிடப்படாமை, அதிக காசோலைகள் பாடசாலை சிற்றூழியர் மற்றும் ஆசிரியர்களின் பெயரில் எழுதி மாற்றப்பட்டமை, எந்த ஒரு காசு பெறுவனவுக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்படாமை போன்ற மோசடிகளை முன்னிறுத்தியும் மற்றும் தற்போதைய விசுவமடு ம.வி பாடசாலை சேவை காலத்தில் பாடசாலை யுடன் சம்மந்தம் இல்லாத விசுவநாதர் நிதியத்தின் ஊடாக பாடசாலைக்கு நிதி சேகரித்தமை, திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் காணொளி வாயிலாக நிதி சேகரித்தமை போன்ற முறைகேடுகளை முன்னிறுத்தி இவரின் ஓய்வூதியம் நிறுத்தப்படவேண்டும் என பிரதமர் செயலகம், இலஞ்ச ஊழல் ஆணை குழு, வடமாகாண ஆளுநர் செயலகம், ஓய்வூதிய திணைக்களம்,வடமாகான பிரதம செயலாளர் செயலகம், தேசிய கணக்காய்வு நிறுவனம், முல்லத்தீவு அரச அதிபர் செயலகம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண மாகாண கல்வி பணிப்பாளர், முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனை போன்றவற்றிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாட்டிற்கு அமைவாக பிரதம மந்திரி செயலகம் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ் அதிபரின் ஓட்டுச்சுட்டான் பிரதேச முறைகேட்டை தொடர்ந்து இவருக்கு ஓய்வூதியமோ பதவி உயர்வோ வழங்கப்படாது என இவரின் பின்னால் வந்த அதிபர் கணக்காய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் அறியும் சட்டத்திற்கு பதில் வழங்கியுள்ளார்.

இருந்தபோதிலும் குறித்த அதிபர் கருணாகரன் அவர்கள் தற்போது அதிபர் சேவை பதவி ஒன்றிற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளதும் இவரின் ஓய்வூதிய கொடுப்பனவு முன்னெடுக்கப்பட்டு வருவதும் விமர்சிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

தாய் தந்தை இழந்த மாணவருக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையையே களவாடிய கருணாகரனின் ஓய்வூதிய கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டால் வட மாகாணத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் மூடுவது சாலச் சிறந்தது !