புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாள் விபத்தில் நசுங்கிப் பலி!! (Photo)

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக இன்று இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

கிளிநொச்சி கல்வி வலய முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.செல்வராசா என்பவே உயிரிழந்தார்.

தனது வீடு நோக்கி சென்று திரும்பியபோது, பட்டா ரக வாகனமொன்று அவரை
மோதியது. அதனால் வீதியில் தூக்கி வீசப்பட்ட அவர், வீதியில் பயணித்த
பேருந்தின் சில்லுக்குள் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று
பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.