யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக உரையாற்ற வந்தவன் கொலைகாரனா? அதிர்ச்சி வீடியோ
இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்….
1993ல் வேலூர் சிறப்புமுகாமில் இருந்து கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.
அப்போது திண்டுக்கல்லில் காவல் கண்காணிப்பாளராக இருந்த சைலேந்திரபாபு தலைமையில் பொலிசார் என்னை அழைத்துச் சென்றனர்.
அதற்கு முன்னைய வாரம் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் பாகனேரி நாகராசன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் நாகராசன் ஈழப் போராளிகளிடம் பயிற்சி பெற்றவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்.
அத்தகைய தோழர் நாகராசனை சுட்டுக் கொன்றது தான் என்று சைலேந்திரபாபு பெருமையாக என்னிடம் கூறினார்.
இவர் தன்னை ஒரு குட்டி தேவாரமாக நினைப்பவர். தேவாரத்தைப் போல் இவரும் பலரை சட்டவிரோதமாக சுட்டுக் கொன்றவர்.
அதனால் இவரால் எனது உயிருக்கு ஆபத்து என்று மனுவாக எழுதி நீதிபதியிடம் நான் கையளித்தேன். இவருடைய காவலில் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டேன்.
அதன்பின் எனது உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது என்று இவர் நீதிபதியிடம் உத்தரவாதம் அளித்த பின்பே நான் திரும்பிச் சென்றேன்.
அதற்கு முன் இவர் என்னிடம் உரையாடிய போது திருச்சியில் ஒரு ஓட்டலை தாங்கள் சோதனை செய்தபோது பல பெண்கள் தங்களிடம் பிடிபட்டார்களாம்.
அவர்களை விசாரணை செய்தபோது அவர்கள் ஈழ அகதிப் பெண்கள் என தெரிய வந்ததாம்.
அதனால் தான் அவர்கள் மீது இரக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யாமல் விரட்டிவிட்டேன் என்று நக்கலாக சொன்னார்.
அதற்கு நான் “அகதியாக வந்தவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்றால் அதற்காக நீங்களும் உங்கள் தமிழ்நாடு அரசும்தான் வெட்கப்பட வேண்டும்” என்றேன் கோபமாக.
இப்படி சொன்னவர் இப்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக உரையாற்ற வந்திருக்கிறாராம்.
இவரெல்லாம் வழி காட்டும் அளவிற்கு யாழ் பல்கலைக்ழக மாணவர் நிலை இருக்கின்றதா?
குறிப்பு – அவர் அளித்த பேட்டி கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன்.

