யாழ் மாநகரசபை சைக்கிள் கட்சி உறுப்பினரான அத்தானின் காவாலி மகன் கத்தி, போதைப்பொருளுடன் கைது!!
யாழில் நேற்றிரவு 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் ஐஸுடனும், மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் சுதர்சன் இந்த நட்வடிக்கையில் செயற்பட்டு குறித்த காவாலியை கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
வாள் மற்றும் ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சைக்கிள் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான அத்தான் என அழைக்கப்படும் ஆட்டோக்காரனான யோகராசாவின் மகன் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வாள் மற்றும் ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 20 இலட்சம் ரூபா பணத்தினை புலனாய்வு பிரிவினருக்கு இலஞ்சமாக வழங்க முற்பட்ட வேளை புலனாய்வு பிரிவினர் அதனை வாங்க மறுத்து கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தான் முன்னாள் புளொட் உறுப்பினர் எனவும் 1997ம் ஆண்டு காலப்பகுதியில் வேம்படிச் சந்திக்கு அருகாமையில் புளொட் முகாம் காணப்பட்ட போது அங்கு அழைக்கப்பட்ட பல பொதுமக்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.






