புதினங்களின் சங்கமம்

யாழில் மீற்றர் வட்டி கொடூரம்!! இருவர் வட்டி கொடுக்காததால் தோட்டத்துக்குள் கொண்டு சென்று கொடூரத் தாக்குதல்!! பொலிசார் தேடுகின்றார்கள்!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 வீடியோவிற்கு இந்த இணைப்பை அழுத்தி SUBSCRIBE செய்த பின்னர் பார்வையிடலாம்