புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறை பகுதியில் போதைப் பொருள் முக்கிய புள்ளி, வாள்வெட்டு காவாலிக்கு விளக்கமறியல் !

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றது பருத்தித்துறை பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்து சமூகத்தையும் இளைஞர்களையும் அழித்து வரும் குறித்த நபருக்கு எதிராக பல தரப்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆதரவாக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிலையில் கடும் அழுத்தம் காரணமாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் பருத்தித்துறை பிரதேசத்தில் போதைப் பொருட்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது