புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் நிறை வெறியில் வாகனத்தை செலுத்தி சதீஸ் என்பவரை படுகாயப்படுத்தி கோமாவில் வீழ்த்திய அஜித்குமாரை காசு வாங்கி பிணையில் விட்டது யார்?

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் கடந்த 9 ஆம் திகதி மாலை விபத்து ஒன்று இடம்பெற்றமை யாவரும் அறிந்ததே.

வீதியால் நடந்து சென்ற பாதசாரிகளை, மது போதையில் மகேந்திரா வாகனத்தை செலுத்தி வந்த நபரான அஜித்குமார் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான நபரான சிறீதரன் சதீஸ் என்பவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் எவ்வாறு குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.இவரை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸாருக்கும், சட்டதரணிக்கும் இலஞ்சம் கொடுத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய போது குறித்த நபர் மதுபோதையில் இருந்தது மக்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்று இன்னொரு விபத்தும் இவரால் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமன்றி குறித்த நபர் மதுபோதையில் தான் எப்போதும் வாகனத்தை செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரை உடனடியாக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் எதாவது இலஞ்சம் பொலிஸாருக்கும், சட்டதரணிக்கும் கைமாறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி குறித்த நபரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும் என மக்கள் சார்பாகவும், தினகரன் சார்பாகவும் வடமாகாண பொலிஸ்மா அதிபரையும், புதுக்குடியிருப்பு ஓ.ஐ.சியான ஜனக குணசேகரவையும் வேண்டி நிற்கின்றோம்.