புதினங்களின் சங்கமம்

இலங்கையில் இணையத்தளம் ஊடான விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கின்றது!! இளைஞர்களே அவதானம்!!

இணையதளம் ஊடாக கொழும்பில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் பம்பலபிட்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டு பெண்களை இலங்கைக்கு அழைத்து வந்து, இணையதளம் ஊடாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், கசகஸ்தான் மற்றும் சீன நாட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இணையதளம் டுபாயில் உள்ள நபர் ஒருவரினால் இயக்கப்பட்டு வந்ததாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.