புதினங்களின் சங்கமம்

யாழில் இருந்து கொழும்பு சென்ற ஹயஸ் விபத்து!! நயினாதீவு பெண் பலி!!(Photos)

யாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் எரிபொருள் பவுஸருடன் சிலாபம் ஆரச்சிகட்டுவவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஹயஸ் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருன்மாறன் கலா என்ற பெண் பலியாகியுள்ளார்.

காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 1 personNo photo description available.No photo description available.Image may contain: outdoorImage may contain: one or more people