புதினங்களின் சங்கமம்

யாழில் அதிகாலையில் வீடு புகுந்து காவாலிக்குழு செய்த பயங்கர வேலை!! புகைப்படங்கள்

இன்று (13.10.2025) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத குழு ஒன்று மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த குழு, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதற்கு தீ வைத்தனர். அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து வீட்டிலிருந்து எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி, மாசியப்பிட்டி சந்தியில் வீதியின் நடுவில் தீ வைத்தனர்.
இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of jeep, golf buggy and scooter