புதினங்களின் சங்கமம்

‘சிங்கள பௌத்தர்களை தாக்கமாட்டோம்!! ஓடிவிடுங்கள்!!‘ பொலிசாரை எச்சரித்தனரா சாய்ந்தமருது குண்டுதாரிகள்??

‘ஆமி, பொலிசாரையோ அல்லது சிங்கள பௌத்தர்களையோ நாம் ஒருபோதும் தாக்கமாட்டோம்….எங்களின் இலக்கு கிறீஸ்தவர்களே…ஆகவே எங்களுடன் மோதாது நீங்கள் ஒடிவிடுங்கள்‘ என சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகள் பாதுகாப்புத்தரப்பினரை எச்சரித்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்புத்தரப்பைச் சேர்ந்த பலரும் இறந்துள்ளதாக தகவல்கள் பரவுகின்ற போதும் அரசதரப்பு இது தொடர்பாக எந்தவித தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.