புதினங்களின் சங்கமம்

பூநகரி ஆசிரியர் நைனேஸ்வரனின் லீலைகள்!! பாடசாலைக்கு செல்வதில்லை!! ஆசிரியைகளிடம் பாலியல் லஞ்சம்!!

வடமாகாண கல்வித்துறை பின்னடைவை சந்திக்கிறதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் பாடசாலைக்கே செல்லாது சமூக ஊடகத்தை பயன்படுத்தி பாலியல் லஞ்சம் கேட்டு மிரட்டிய ஆசிரியர் ஒருவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.பாடசாலை அதிபர் முதல் ஆசிரியர்கள் ஈறாக தனது சமூக ஊடக பெயரை பயன்படுத்தி மிரட்டுவதுடன் தற்போது பாலியல் லஞ்சமும் கோரியதாக கிளிநொச்சியை சேர்ந்த நைனேஸ்வரன் என்ற ஆசிரியர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டள்ளது
பூநகரியை சேர்ந்த குறித்த ஆசிரியர் அப்பகுதியிலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையெனும் சிறிய பாடசாலையில் கல்வி கற்பித்துவருகின்றார்.ஆனால் அவர் பாடசாலையில் நின்றதை விட வீதியிலும் வேறுபாடசாலைகளிலும் நின்ற நேரமே அதிகமென்கின்றன தொடர்புடைய தரப்புக்கள்.
பூநகரியிலுள்ள பாடசாலைகளில் எந்த நிகழ்வாயினும் முதலில் தனது கைத்தொலைபேசியுடன் சென்றுவிடும் இந்நபர் பின்னர் நேரடி ஒளிபரப்பென அலப்பறை காண்பிப்பது வழமையாகும்.
அதனால் தனது வகுப்பறைகளை கூட அவர் மறந்து விடுவாராம்.
ஏற்கனவே பகல் கனவில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மாடு சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு படுதோல்வியடைந்த இந்நபர் மீண்டும் சமூக ஊடக ஊடகவியலாளர் என மிரட்டுவதாக ஆசிரியைகள் கொழும்பில் கல்வி அமைச்சரிடம் கையளித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆசிரியை ஒருவர் பாடசாலைக்கு தாமதமாக செல்வதாக கூறி மிரட்டி தன்னிடமுள்ள வீடியோவை பகிரப்போவதாக மிரட்டியுள்ளதுடன் தன்னுடன் இணங்கி செல்ல கோரியுள்ளார்.
இதனால் அச்சமுற்ற ஆசிரியை மேலிடத்திற்கு புகார் செய்யவே தகவல்கள் வெளிவந்துள்ளது.
மறுபுறம் தன்னை விவசாய அமைப்பின் தலைவரென சொல்லிக்கொள்ளும் இந்நபர் தற்போது மிரட்டல் விடுத்துவருவதுடன் தன்னை சமூக ஊடகவியலாளர் எனவும் பிரச்சாரப் படுத்தி மிரட்டி வருகிறாராம்.
ஏற்கனவே ஜனாதிபதி வரை மொட்டை கடித முறைப்பாட்டால் கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்தின் பின்னணியிலும் ஆசிரியர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுகின்றது.