FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழ் ரில்கோவில் இளைஞர் யுவதிகள் சந்தோசமாக அனுபவித்ததை நேரில் பார்த்து மகிழ்ந்த ஜெயசீலனின் ஊழியர்கள்!!

யாழ் ரில்கோ ஹோட்டலில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடந்த போதை விருந்து தொடர்பாக ரில்கோ நிர்வாகம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.  இந்த அறிக்கையை வாசித்த பின்னர் அதற்கு கீழே உள்ள எமது விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்….

May be an image of map and text that says "Jalfma City Hotels (Pvt) Lid. City & Resort Hotels Head Office 70/6, K.K.S Road, Jaffna. Tel: 021 222 5969 021 720 Fax: 021 222 7291 Web: www.tilkohotels.com e-mail: info@tilkohotels.com மதிப்பிற்குரிய நண்பர்களிற்கு, 04.10.2023 நிகழ்வு தொடர்பாக Dat......./... 10.11.2023 மேற்படி வீடயம் தொடர்பில் சில வாரங்களிற்கு முன்னர் இருவர் எம்மைத் தொடர்பு என்று கேட்டார்கள். நீகழ்நிலை பெற்றுக் கோட்டலிற்கு மற்றும் சாலீனி எனும் பெயர்களையுடைய கோட்டலீல் நுளைவுச்சிட்டு (Online) நிகழ்வு காரணத்தால் பொலீசார் கோட்டலீல் எமது நிறுவனம் சார்பீல் மடயும் தலைமையகத்திற்கு அறிவீத்து வரை கொள்ளக்கூடிய மதுபானம் செய்யப்பட்டது பின்வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர். உண்மையீல் இந்நிகழ்வை ஒருங்கமைத்த இளம் ஒருங்கமைப்பாளர்கள் திறம்பட அவர்கள் நான் ரில்கோ கோட்டலை எமது முக்கிய சிருந்தள்ளர்கள். இருந்து இங்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளோம். பன்நாட்டு முக்கிய பீரமுகர்கள் தங்கி கரப்பந்தாட்டம்."May be an image of studying and text

 

யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலனின் அனுமதியுடன், அவரின் ஊழியர்கள் நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இளைஞர்? யுவதிகள்? உல்லாசமாக குடித்து மகிழ்ந்து சந்தோசமாக இருந்த பின்னர் அமைதியாக வெளியேறிச் சென்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். அத்துடன் 6 பொலிசரையும அவர்களின் பாதுகாப்புக்கு வெளியில் உலாவச் செய்து இளைஞர், யுவதிகளுக்கு பயம் ஏற்படாத வண்ணம் ரில்கோ முதலாளி எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

யுத்தம் நடைபெற்று முடிந்த பின்னர், ரில்கோ முதலாளி த.திலகராஜ் குறித்த ஹோட்டலால் வந்த வருமானத்தை வைத்து பலரையும் வாழ வைத்துவருவதும், குறும்படங்களுக்கு நிதி உதவி செய்துள்ளதும், பந்துகள் வாங்கி கொடுத்து விளையாட்டை ஊக்கப்படுத்தியுள்ளதும் பாராட்டத்தக்கது.

இவ்வாறான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ரில்கோ ஹோட்டல் மட்டுமல்லாது, மாநகரபைக்கு கீழ் உள்ள விடுதிகள் மற்றும் நகரசபை, பிரதேசசபைகளின் ஏரியாவில் உள்ள விடுதிகளிலும் நடைபெறுவது நல்ல வருமானத்தை குறித்த சபைகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கும்.

ஆனாலும் சில விடயங்களில் மாநகரசபை நிர்வாகம் மற்றும் பொலிசார் ஓரவஞ்சணையுடன் செயற்படுவது போல் தெரிகின்றது. கூட்டமாக இளைஞர் யுவதிகள் சேர்ந்து ஒரு ஹோட்டலில் குடித்து மகிழ்ந்து உல்லாசமாக இருப்பதை அனுமதிக்கின்றார்கள். ஆனால் சில விடுதிகளில் தனித் தனி ஜோடிகளாக குடித்து மகிழ்ந்து உல்லாசமாக இருப்பவர்களை மாநகரசபை நிர்வாகமும் பொலிசாரும் அனுமதிப்பதில்லை. அவர்களை நிம்மதியாக இருக்கவிடாது பிடித்து நீதிமன்றம்வரை கொண்டு செல்கின்றார்கள். அண்மையில் யாழ் கோவில் வீதியில் உள்ள பூங்காவில் உள்ள அறைகளுக்கு இருந்த ஜோடிகளைக் கூட நிம்மதியாக இருக்க விடாமல் நீதிமன்றில் நிறுத்தினார்கள். அந்த பூங்கா முதலாளியாக 80 வயது கிழவனைக் கூட விட்டுவைக்கவில்லை.சில வேளை அவர்கள் தனி அறைக்குள் சந்தோசமாக இருப்பதை மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலனின் அனுமதி பெற்று அவரின் ஊழியர்கள் அறைக்குள் இருக்கும் போது அவர்களின் முன்னால் சந்தோசமாக இருக்க விடுவார்கள் போல் தோன்றுகின்றது.

எமது இளைஞர்கள் தான் எமது மண்ணின் எதிர்கால தலைவர்கள். அவர்களிற்குமென்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அவர்கள் மேல் குற்றங்களை சுமத்தாமல் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். எமது வேறுபாடுகளை மறந்து எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை நாமே ஒன்றாக நிர்ணயிக்க வேண்டும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என ரில்ஹோ முதலாளி கூறுவது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கின்றது.

இந்த போதை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்ததற்கு சமூகவலைத்தளங்களில் சிலர் ஆதரவு கொடுத்துள்ளார்கள். கொழும்பில், வெளிநாடுகளில் சென்று உங்கள் பிள்ளைகள் செய்யாத செயலையா யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் செய்தார்கள்.உங்கள் பிள்ளைகளை எல்லாவற்றுக்கும் அனுப்பி விட்டு இவற்றை மட்டும் விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது என்றபடியெல்லாம் பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன. இவ்வாறான பதிவுகளை இடுபவர்கள் தமது மனைவிமாரையோ அல்லது தமது அக்கா தங்கையையோ இவ்வாறான போதை விருந்துக்கு அனுப்பி யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகளை உற்சாகப்படுத்தல் வேண்டும்.

குறிப்பாக மாநகரசபை ஆணையாளரின் மனைவி, பிள்ளைகள், ரில்கோ முதலாளியின் பெண் உறவுகள் மற்றும் பேஸ்புக்கில் இவ்வாறான வருமானம் மிக்க ஒரு நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகவலைத்தள போராளிகள் தங்களது பெண் உறவுகளையும் இவ்வாறான போதை விருந்துக்கு அனுப்பி உற்சாகப்படுத்தினால் மட்டுமே இவற்றை பிரபலப்படுத்த முடியும்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் பாடசாலைகளில் இந்த போதை விருந்து தொடர்பாக தெளிவுபடுத்தி அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகள், கருத்தடை உறைகள் தொடர்பான விளக்கங்கள் கொடுத்து அவர்களையும் இவற்றில் பங்குபெறச் செய்தால் யாழ்ப்பாணத்திற்கு பெரும் வருமானம் கிடைக்கும். அத்துடன் ரில்கோ முதலாளி இவ்வாறான செயற்பாடுகளை வைத்து பணம் சம்பாதித்து சமூகத்துக்கு உதவி செய்தது போல மாணவர்களை வைத்து பெரும் பணம் சம்பாதித்து யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை மிகவும் பணக்காரர்களாக மாற்ற முடியும். இது ஒன்றும் சட்டவிரோதமான செயற்பாடு இல்லை என்பது மாநகரசபை அனுமதி கொடுத்து அவர்கள் சந்தோசமாக இருப்பதை ஊழியர்களே நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை ரில்கோ முதலாளி அறிக்கை விட்ட பின்னரே தெரியவந்தது.

இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும் போது மாநகரசபை ஊழியர்கள் மட்டும் நின்று பலனில்லை… சந்தோச மிகுதில் அவர்கள் செய்யும் செயற்பாடுகள் சில பாதகமாக அமையலாம். அதற்காக அங்கு எயிட்ஸ் கட்டுப்பாட்டுடன் தொடர்பு பட்ட வைத்தியர்களும் இருந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். பெண்கள், ஆண்கள் பயப்படாது துணிவாக சந்தோசமாக இருக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்ணியவாதிகள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான செயற்பாடுகளை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அத்துடன் போதை விருந்தில் பெண்கள் கலந்து கொள்வது கூடாது என பெண்களுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளதை பெண்ணியவாதிகள் உற்று நோக்க வேண்டும். பெண்களுக்கு ஆதரவாக நீங்களும் குறித்த போதை விருந்தில் கலந்து கொண்டு உல்லாசமாக இருந்தால்தான் ஏனைய யாழ்ப்பாணப் பெண்களும் உற்சாகமாகவும் துணிவாகவும் இவ்வாறான விருந்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் நீங்கள் பகீரங்கமாக இவ்வாறான உல்லாச நடவடிக்கையில் ஈடுபடாது ஏனைய பெண்களைமட்டும் உசுப்பேற்றுவது தவறு. பெண்ணியவாதிகளான நீங்கள் இவ்வாறான நிகழ்வுகளை தனி அறைக்குள் செய்கின்றீர்கள் என்பதை ஏனைய சாதாரண யாழ்ப்பாணத்துப் பெண்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என நீங்கள் எண்ணுவது தவறு. உங்களது தனிப்பட்ட விடயங்கள் ஏதாவது ஊடகங்களில் வந்தால்தானே அது ஏனைய பெண்களுக்கு தெரியும். ஆகவே யாழ்பாணத்து பெண்ணியவாதிகளே நீங்கள் முதலில் பகீரங்கமாக இவ்வாறான போதை நிகழ்வு மற்றும் பெண்களை காட்டி ஆண்களை ஈர்த்து பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். இது ஒரு தவறான நடவடிக்கை அல்ல. இது சட்டவிரோதமல்ல. இதற்கு யாழ் மாநகரசபை ஆணையாளர் அனுமதி தருவார்.ஆனால் நேரில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் வெக்கப்படாது உல்லாச நடவடிக்கையில் ஈடுபடுங்கள். ஏனைய பெண்களும் உற்சாகமாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவார்கள். யாழ்ப்பாணத்துக்கு வருமானம் கொட்டும்…. அந்த வருமானத்தை வைத்து ரில்கோ முதலாளி போல் உள்ளூரில் உதவி செய்யாது நாம் உலகநாடுகளுக்கே உதவி செய்யலாம்….

வம்பன் என்ற பெயரை வைத்துக் கொண்டு ஊடகதர்மம் என்றால் என்னவென்று தெரியாது மிகவும் கேவலமாக நாம் பல செய்திகளை வெளியிட்டுள்ளோம். பலரை அவமானப்படுத்தியுள்ளோம். மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை எமது பதிவுகளில் இட்டுள்ளோம். அவற்றை நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கின்றது. இனிமேல் இவ்வாறான பதிவுகளை பெருமளவுக்கு கட்டுப்படுத்தி தமிழர் பிரதேசங்களில் நடக்கும் இவ்வாறன உன்னத செயற்பாடுகளை தற்போது வெளிப்படுத்தியது போல மிகவும் பொறுப்புணர்வுடன் நாம் வெளியிடுவோம்.

ஏற்கனவே நாம் வெளியிட்ட சில ஊடக தர்மமற்ற பதிவுகளுக்கு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையங்கள் மற்றும் கொழும்பு சைபர்கிறைம், காங்கேசன்துறை சைபர்கிறைம் போன்றவற்றில் ஏராளமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையிலும் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் எமது வம்பன் இணையத்தள செய்தி தொடர்பாக அவரது மாநகரசபையில் வேலை செய்து வேறு அலுவலகத்தில் தற்போது வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு முறையிட்டு அவருக்கு எதிராக கே.கே.எஸ் சைபர் கிறைமில் விசாரணைகள் நடைபெற்றதாக தெரியவருகின்றது. இதனால் அந்த உத்தியோகத்தர் கடுப்பாகி வம்பன் இணையத்தளத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனிமேல் மாநகரசபை ஆணையாளர் எமது இணையத்தளத்திற்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாத வண்ணம் அவரது நடவடிக்கைகளை நாம் இவ்வாறான பதிவுகள் மூலம் ஊக்கப்படுத்துவோம் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வம்பன்……………..

ரில்கோ முதலாளி வெளியிட்ட ஊடக செய்தியை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்….

எமது ஹோட்டலில் “DJ night” நிகழ்வு

முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள்
அமைதியாக வெளியேறிச் சென்றனர் என ரில்கோ ஹோட்டல் முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.
யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றதுடன் அங்கு வந்த சிலர் மது போதை தலைக்கு ஏற தாம் கொண்டு வந்திருந்த கஞ்சா , ஐஸ் போன்ற போதை பொருளையும் நுகர தொடங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ரில்கோ கோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர், த.திலகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விளக்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்க அறிக்கையில், 04.10.2023 நிகழ்வு தொடர்பாக மேற்படி விடயம் தொடர்பில் சில வாரங்களிற்கு முன்னர் ஐதுசன் மற்றும் சாலினி எனும் பெயர்களையுடைய
இருவர் எம்மைத் தொடர்பு கொண்டு DJ Night நிகழ்வு ஒன்றை செய்வதற்கு எமது ரில்கோ கோட்டலில் இடம்
வேண்டும் என்று கேட்டார்கள்.
நிகழ்நிலை கட்டண நுழைவுச்சீட்டு (Online) நிகழ்வு என்ற காரணத்தால்
மேற்படி நிகழ்விற்கான அனுமதியை மாநகரசபையிடம் பெற்றுவருமாறு கேட்டுக்கொண்டோம். அதன்பிரகாரம்
அந்த அனுமதியை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்வு நடந்து முடியும் வரை மாநகரசபை பிரதிநிதிகள்
மேற்படி நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாண பொலீஸ் தலைமையகத்திற்கு அறிவித்து
கோட்டலிற்கு வெளியே 06 பொலீசார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
எமது கோட்டலில் 100 – 140 பேர் வரை கொள்ளக்கூடிய மண்டபம் (Hall) வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
எமது நிறுவனம் சார்பில் அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்டது. நிகழ்வு
முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள்
அமைதியாக வெளியேறிச் சென்றனர். உண்மையில் இந்நிகழ்வை ஒருங்கமைத்த இளம் ஒருங்கமைப்பாளர்கள்
இந்நிகழ்வை திறம்பட நடாத்தினார்கள். அவர்கள் பாராட்டிற்குரியவர்கள்.
நான் எமது ஈழநாட்டை மிகவும் நேசிக்கின்றேன். பிரித்தானியாவில் இருந்து போர் நடக்கும் போது இங்கு வந்து ரில்கோ கோட்டலை கட்டியுள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளோம்.
எமது கோட்டலில் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. நாட்டு முக் பிரமுகர்கள் தங்கி
இருந்துள்ளார்கள். நாம் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம்,
கூடைப்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுக்களிற்கும் குறுந்திரைப்பட தயாரிப்பு
துறைகளின் முன்னேற்றத்திற்கு அனுசரணையாளராகவும் உறுதுணையாகவும் இருந்துள்ளோம்.
பாடசாலைகளிற்கும் கிராமங்களிற்கும் உதவிகள் செய்துள்ளோம்.
கடந்த O2 நாட்களாக சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பானதும் முற்றிலும் நடைபெறாத சம்பவங்களையும்
திரிபுபடுத்தி எழுதப்பட்டமை மன வேதனைக்குரியவை.
எமது இளைஞர்கள் தான் எமது மண்ணின் எதிர்கால தலைவர்கள். அவர்களிற்குமென்று ஒரு வாழ்க்கை முறை உண்டு. அவர்கள் மேல் குற்றங்களை சுமத்தாமல் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். எமது
வேறுபாடுகளை மறந்து எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தை நாமே ஒன்றாக நிர்ணயிக்க வேண்டும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.