யாழ். பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது காவாலி நேற்று முன்தினம் (07) கைது செய்யப்பட்டான்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், காவாலியிடமிருந்து இருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த இந்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவரை நேற்று (08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டான்.





