புதினங்களின் சங்கமம்

திருக்கேதீஸ்வர கோவில் பெயரைப் பயன்படுத்தி பெண்களுடன் சேட்டை விட்டு மோசடி செய்யும் அந்தக் கயவன் யார்? அவதானம் மக்களே!!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.

திருக்கேதீச்சர நாதரின் பெயரை திருட்டு வேலைகள் செய்வதற்கு ஒருவர் / ஒரு குழுவினர் பயன்படுத்தி வருகின்றமை மனவருத்தத்தை அளிக்கிறது.

0760773591 என்ற இலக்கத்தில் இருந்து நிலையான தொலைபேசி அல்லது கைபேசிக்கு குறித்த நபர் அழைப்பினை மேற்கொள்கின்றார். எதிரில் பேசுபவர்களிடம், தான் திருக்கேதீச்சர வளாகத்தில் ஒரு ஆச்சிரமத்தை நடாத்துவதாக கூறுகின்றார்.

கணவனை இழந்து வாழும் பெண்களின் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதாகவும், அவர்களது கல்விச் செலவை முழுவதுமாக தானே பொறுப்பேற்பதாகவும் கூறுகின்றார். அதற்காக பெண் தலைமைத்துவ குடும்பங்களை ஒழுங்கு செய்து தாருமாறு கூறுகின்றார். இந்த தொலைபேசி இலக்கம் எவ்வாறு கிடைத்தது என்று கேட்டால் sri lanka telecom, dialog உள்ளிட்ட கம்பனிகளின் பெயரை கூறி அவர்களது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி இலக்கங்களை பெறுவதாக கூறுகின்றார்.

அவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை வழங்கும்போது அந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள KFC நிறுவனத்துக்கு வருமாறு கூறுகின்றார். அங்கே சென்றால் எதுவும் வழங்கப்படுவதில்லை. பின்னர் மானிப்பாயில் உள்ள வங்கி ஒன்றின் பெயரை சொல்லி அந்த வங்கிக்கு அருகேயுள்ள கடை ஒன்றிற்கு போகுமாறு கூறுவார் (சிலவேளைகளில் ஆளுக்காள் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லுமாறு கூறலாம்). அங்கு சென்றவுடன், பெரிய தொகை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஒரு தொகை பணத்தை தனது மேற்குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு கூறுவார். அதனை நம்பி அவர்களும் அந்த தொகையை வைப்பிலிடுவார்கள். பின்னர் மீண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் பிறிதொரு தொகையை சொல்லி வைப்பிலிடுமாறு கூறுவார். பணம் வைப்பிலிட்ட பிறகு அவர் பணத்தை வைப்பிலிட்டவர்களது இலக்கத்தை block செய்வார்.

பெண் தலைமைத்துவ குடும்பம் என்பது பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் தான் அன்றாட வாழ்க்கையை நடாத்தி வருகின்றன. அவர்களுக்கு உதவி செய்கின்றதாக கூறி ஏற்கனவே உள்ளதையும் பிடுங்கி உங்களது வயிற்றை நிரப்பினால் அது உங்களுக்கு நல்லதா? அந்த குடும்பங்கள் ஏற்கனவே எவ்வளவு நொந்து இருப்பார்கள் என கொஞ்சமாவது யோசிக்கின்றீர்களா?

ஒருவர் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் பணத்தை கேட்டால் உடனே நீங்கள் பணத்தை வைப்பு செய்வீர்கள? உதவி செய்ய வருகின்றவன் எதற்காக பணத்தை கேட்க வேண்டும்? கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவு இல்லையா?

அந்த நபர் மன்னார் இல்லை யாழ்ப்பாணம் தான். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய சிறிய கிராமங்களின் பெயர்கள்கூய அத்துப்படியாக அவருக்கு தெரிகிறது. ஆகவே அந்த கயவன் யாழ்ப்பாணம் தான்.