புதினங்களின் சங்கமம்

யாழில் ஆசிரியர் தினத்தில் ஆசிரியை ஜெயந்தினி பலி!

இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாத காலமாகச் சிகிச்சை பெற்று வந்த யாழ் வடமராட்சி அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை சர்வதேச ஆசிரியர் தினமான இன்று திங்கட்கிழமை (06.10.2025) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் குறித்த ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்பித்து வந்த அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கேந்திரநாதன் ஜெயந்தினி (வயது- 55) என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.