இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

சித்ராவின் வழக்கில் புதிய திருப்பம் – 3ஆவது நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!!

சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனின் முறைப்பாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய 3ஆவது நபர் யார்? என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி தனது கணவருடன் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் பிரேத பரிசோதனையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய சந்தேகத்தில் சித்ராவின் கணவரை நசரத்பேட்டை போலிஸார் கைது செய்ததுடன் சித்ராவின் மரணம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டவுடன் சித்ராவின் மரணம் தொடர்பான பரபரப்பு அடங்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு பொலிஸாரின் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளன.

நடிகை சித்ரா மரணம்: கணவர், மாமனாரிடம் பல மணி நேரம் விசாரணை – BBC News தமிழ்

இதனையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சித்ரா ஏற்கனவே 3 பேரை காதலித்ததாகவும், அதில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றதாகவும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சித்திராவின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சித்ரா உடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டிய விஜய் டிவி பிரபலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!! – Seithipunal
முன்னதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்துடன் ஏற்பட்ட முறன்பாடு காரணமாக சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்தனர்.

எனினும் தற்போது சித்ரா குறித்த மாறுபட்ட தகவல்களை ஹேம்நாத்தும் அவரின் தந்தை ரவிச்சந்திரனும் தெரிவித்து வருகின்றனர்.

ரவிச்சந்திரன் இது குறித்து அளித்துள்ள முறைப்பாட்டில், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வைத்து மிரட்டியதாகவும், அரசியல்வாதி ஒருவர் தொடர்ந்து பேசி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சித்ராவை மிரட்டிய நபர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மின்னம்பலம்:சித்ரா தற்கொலை இரவு முதல் ஹேமந்த் கைது வரை! நடந்தது என்ன?
இதனையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய 3ஆவது நபர் யார்? என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த நபர் பற்றி விசாரணை நடத்த நசரத்பேட்டை பொலிசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தொடர்பில் விசாரணை நடந்து வருகின்றது.

இந்நிலையில் அரசியல்வாதி ஒருவர் சித்ராவின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதாகவும், புத்தாண்டை தன்னுடன் தான் கொண்டாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகின.

விசாரணைகளின் முடிவில் இவர்கள் இருவரில் தற்கொலைக்கு தூண்டியது யார்? என்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.