புதினங்களின் சங்கமம்

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி? சந்தேகத்தில் ஒருவர் கைது!! நடந்தது என்ன?

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கையை விசேட அதிரடிப்படை நேற்றைய தினம் மேற்கொண்டுள்ளது.

தில்லைநாதன் ஆனந்தராஜ் என்ற பெயருடைய நபரே, கல்முனையில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

மாரியம்மன் வீதி – பாண்டிருப்பு பகுதியில் முன்னர் வசித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொடர்ச்சியாக ஆயுதங்களை மீட்டு வருகின்றனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கின் சில இடங்களிலேயே இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டில் தேர்தல் ஒன்று நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் நாட்டில் ஒரு வித பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.