புதினங்களின் சங்கமம்

மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கடற்பசு

திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.

இந் நிலையில் இன்று காலை சேதுக்கரை தெற்கு மன்னா் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

கரை ஒதுங்கிய கடல் பசு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பெண் கடல் பசு எனவும் அது சுமார் 300 கிலோ எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா அல்லது உடல் நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என கீழக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x