புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் விபத்தில் பெண் அரச ஊழியர் மேனகா பலி!!

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் பல பாகங்களிலிருந்தும் பாதயாத்திரையாக தினமும் பலர் வருகைதருகின்றர்.இன்று பாண்டிருப்பிலிலிருந்து பாத யாத்திரையாக பக்தர்கள் வருகை தந்த நிலையில் வேப்பையடி என்ற இடத்தில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் பாதயாத்திரைவந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.இவ் விபத்தில் பாண்டிருப்பு அரசடியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா மேனகா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றி வருவதோடு கடமை தவறாத கண்ணியமான ஒரு அரச சேவையாளர் எனவும் அனைவருடனும் சகஜமாக பழகுகின்ற பண்பான ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
May be an image of 1 person and smiling