புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சி கிழக்கில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல்க் கொள்ளை.! (Photos)

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக பெருமளவான மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் இன்று 18.12.2024 தெரிவித்தனர்.

ஆழியவளை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும் அவர்களால் குறித்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நள்ளிரவு நேரம் காவல்களை அமைத்து JCB இயந்திரம் கொண்டு டிப்பர்கள் மூலம் பாரிய மணல் கொள்ளையை மணல் கடத்தல் காரர்கள் தொடர்ந்து செய்துவருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணலை சூரையாடி செல்வதால் தற்பொழுது பாதைகளிலும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடிமனைகளுக்குள் வரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து எமது ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாத்து தருமாறும் கோரியுள்ளனர்.

May be an image of treeNo photo description available.May be an image of 3 people, people fishing, fishing rod and body of water