புதினங்களின் சங்கமம்

யாழ் நாவற்குழியில் சிறுமியைப் பந்தாடிய கனரகவாகனம்!! (Photos)

யாழ்.நாவற்குழி பகுதியில் கனரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை
இழந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவா் படுகாயமடைந்துள்ளதாக
தெரியவருகின்றது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மிகை வேகத்தில் பயணித்த குறித்த பழு தூக்கி வாகனம் கட்டுப்படுத்த முடியாத வேகத்தினால், வீட்டின் மதில் சுவரை இடித்து பாய்ந்தது.

இந்த விபத்தில் 15 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

மன்னார்ப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கிப் பயணித்த போதே கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து
விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.