புதினங்களின் சங்கமம்

மர்ம பகுதியில் மெழுகுவர்த்தி சொருகி ராக்கிங் செய்த சிங்கள மாணவிகளுக்கு நடந்த கதி!!

பகிடிவதைக்கு உள்ளான மாணவியொருவருக்கு 6 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க காலி
மேல்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இழப்பீட்டுடன் வழக்கு சமரசம்
செய்யப்பட்டுள்ளது.

லவுதுவ உயர்தொழில்நுட்பபீடத்தின் மாணவியொருவரை மோசமாக பகிடிவதைக்குள்ளாக்கிய
குற்றம்சாட்டப்பட்ட ஒரு மாணவன், மூன்று மாணவிகளே குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்கள் தமது
குற்றத்தை ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்கி, வழக்கை சமரசமாக முடிக்க விரும்பினர். இதை
பகிடிவதைக்குள்ளாகிய மாணவியும் ஏற்றுக்கொண்டதையடுத்து, நேற்று காலி மேல் நீதிமன்றம் இந்த
உத்தரவை பிறப்பித்தது.

2018ம் ஆண்டு இந்த பகிடிவதை சம்பவம் இடம்பெற்றிருந்தது. மோசமான பகிடிவதையால்
அதிர்ச்சியடைந்த மாணவி, உயர்தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கையை பாதியிலேயே
முடித்துக் கொண்டு விட்டார்.

எனினும், பகிடிவதையில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது காலி மேல்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார். மாணவன் முதலாவது சந்தேகநபராகவும், மாணவிகள் 2,3,4வது சந்தேகநபர்களாகவும்
பெயரிடப்பட்டனர்.

மாணவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். 1,2வது
எதிரிகள் இணைந்து ஆறு இலட்சம் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. 3,4வது
எதிரிகளான மாணவிகளின் குடும்பசூழலை கருத்திற் கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவி
சமரசத்திற்கு உடன்பட்டார்.

நான்கு எதிரிகளையும் கடுமையாக எச்சரித்த நீதிபதி, எதிர்காலத்தில் அவர்கள் பகிடிவதையில்
ஈடுபட்டால், கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தார்.