முல்லைத்தீவில் இளம் மனைவி மீது கள்ளத் தொடர்பு சந்தேகம்!! கணவன், மாமனின் வெறிச் செயல்!!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில் இளம்பெண் மீது அவரது
கணவரும், மாமனாரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.
26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், வாள்வெட்டைத் தடுக்கச் சென்ற 24 வயதுடைய உறவினர்
இளைஞன் ஒருவருமே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்
மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதன் விளைவாகவே, இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,
புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டை நடத்திய கணவன் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கணவரின் தந்தை
நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு தொழில் கொடிகட்டி பறக்கும் நிலையில், வாள்வெட்டு
உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுகிறது. எனவே சம்மந்தப்பட்டவர்கள் இதில்
கவனமெடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

