கோத்தா விதித்த அதிரடித் தடையால் பரபரப்பு!! ஊடகவியலாளர்களின் நிலை என்ன?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி கேட்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டங்களின் போது ஊடகவியலாளர்களினால் திடீர் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு வழங்கப்படும் பதில்கள் சில சந்தர்ப்பங்களில் சர்ச்சையை ஏற்படுத்துகின்றது.
இலங்கை நாடாளுமன்றத்தினுள் தொடர்ந்து வழுக்கி விழும் உறுப்பினர்கள்! 24 பேர் பாதிப்பு
எதிரொலியின் “நச்சுனு 5 பஞ்” ! திடீரென பாரசூட்டில் இறங்கி அரசியல் செய்யும் விக்னேஸ்வரன்
இதனால் அது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கடும் பாதிப்பினை ஏற்படுத்தி விடும் எனகோத்தபாய ராஜபக்சவின் ஆலோசகர் தெரிவித்ததனையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு நேரடியாக ஆதரவு வழங்கும் தனியார் ஊடக நிறுவனங்களின் பணிப்பாளர்கள் தமது பிராந்திய செய்தியாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்ளுக்கு விடுக்கப்பட்ட இந்த தடை எந்த சந்தர்ப்பத்திலாவது அவர் ஜனாதிபதியாக வந்தால் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி தற்போது ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.