புதினங்களின் சங்கமம்

பாணத்துறையில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!!

பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.மேலும் சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 personMay be an image of 1 person