யாழில். 400 போதை மாத்திரைகளுடன் 21 வயதான காவாலி கைது!!
யாழ்ப்பாணத்தில் 400 போதை மாத்திரைகளுடன் 21 வயது காவாலி கைது செய்யப்பட்டுள்ளான்.தாவடி சந்தியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீதியால் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்றவனை வழிமறித்து சோதனையிட்ட வேளையே , போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவனை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

