புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பெண் அரச ஊழியரின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட சுவிஸ் அங்கிள்!! காட்டிக் கொடுத்த கைத் தொலைபேசி!!

யாழ் கொக்குவில் பகுதியில் பெண் அரச ஊழியர் ஒருவரின் கட்டிலின் கீழ் இருந்து சுவிஸ்நாட்டிலிருந்து வந்த 49 வயதான அங்கிள் ஒருவர் பிடிபட்டுள்ளார், யாழ் நல்லுார்ப் பகுதியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் கடமையாற்றும் திருமணமாகாத பெண் ஊழியர் கொக்குவில் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். பெண் ஊழியரின் அண்ணனும் இன்னுமொரு சகோதரியும் சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வருவதாகத் தெரியவருகி்ன்றது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமது பெற்றோர் மற்றும் சகோதரிக்கு சில பொருட்களை யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமான ஒருவரிடம் கொடுத்து தமது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறியதுடன் அது தொடர்பாக தமது பெற்றோர் மற்றும் சகோதரியிடமும் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் கட்டுநாயக்காவிலிருந்து தமது பெற்றோரிடம் செல்லும் போது மதுபாண போத்தலும் வாங்கி தனது தந்தையிடம் கொடுக்குமாறு கூறி பணமும் கொடுத்துள்ளார்கள்.

நல்லுார் திருவிழாவுக்கு முன்னரே யாழ் வந்த குறித்த அ்ங்கிள், கடந்த சனிக்கிழமை பூங்காவனம் அன்று மாலை, பெண் அரச ஊழியரும் தாயும் நல்லுார் பூங்காவனத்துக்கு செல்ல ஆயத்தமாகிய வேளையே சுவிஸ் நட்புக்கள் கொடுத்தனுப்பிய பொருட்களை அவர்களின் பெற்றோரின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிளை வரவேற்று கதைத்த பின் தாம் நல்லுார் செல்வதாக கூறி தமது தந்தையுடன் கதைத்துக் கொண்டிருக்குமாறு தெரிவித்த பின் பெண் ஊழியரும் தாயும் பூங்காவனம் சென்று விட்டனர்.

தந்தையுடன் கதையைத் தொடங்கிய அங்கிள் ஒரு கட்டத்தில் அவருக்கு கொண்டு வந்த மதுபாணப் போத்தலை திறந்து இருவரும் விளையாடத் தொடங்கினர். மாலையில் குடிக்கத் தொடங்கி இரவு வரை இருவரும் சேர்ந்து ஒரு லீற்றர் மதுபாணத்தை குடித்து முடித்துள்ளார்கள். அதன் பின்னர் அங்கு நின்ற அங்கிள் மாயமானார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த தாயும் மகளும் தந்தை நிறை வெறியில் மிதப்பதை கண்டு சுவிஸ் அங்கிளின் திருவிளையாடல் என அறிந்து அவரை அவரை படுக்கைக்கு விட்டுள்ளார்கள். அத்துடன் சுவிஸ் அங்கிள் வந்திருந்த எலெக்ரிக் மோட்டார் சைக்கள் அங்கு நின்றது. அதனையடுத்து சுவிஸ் அங்கிளை தேடத் தொடங்கினர். அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அயலவர்களை விசாரித்த போது ஆட்டோ ஒன்று வந்து சென்றதாக அவர்கள் கூறியதால் வெறி ஏறி ஆட்டோவில் அங்கிள் சென்று விட்டதாக நினைத்து படுக்கைக்கு சென்றுள்ளார்கள்.

இரவு 10 மணியளவில் பெண் ஊழியர் படுத்திருந்த கட்டிலின் கீ்ழ் தொலைபேசி சத்தம் கேட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த பெண் ஊழியர் கட்டிலுக்கு கீழ் பார்த்த போது மனித உருவம் ஒன்று அசைந்துள்ளது. உடனே குக்குரல் இட்டு பெண் ஊழியர் கத்தியுள்ளார். அங்கு குவிந்த அயலவர்கள் கட்டிலின் கீழ் கிடந்த சுவிஸ்அங்கிளை இழுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்கள். அதன் பின்னரே அவர் நிறை வெறியில் நிற்பது அனைவருக்கும் விளங்கியது. அவருக்கு தொலைபேசி எடுத்தது அவரது மனைவி எனவும் அதன் பின்னர் அவரது மனைவிக்கு பெண் ஊழியர் தொடர்பு எடுத்து அவரை வரவழைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் தெரியவருகி்ன்றது.

சுவிஸ் அங்கிள் கட்டிலுக்கு கீழ் இருந்து மீட்கப்படும் காட்சிகளை அப்பகுதி இளைஞர்கள் சிலர் எமக்கு அனுப்பியிருந்தார்கள். இருப்பினும் அவர் நிறை வெறியில் வேறு நோக்கம் எதுவும் இல்லாது கட்டிலுக்குள் புகுந்ததால் நாம் அதனை பிரசுரிக்கவில்லை…..