பொலன்னறுவ சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை வீசிய ஒருவர் கைது!!
பொலன்னறுவ சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் புகையிலையை வீசிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (30) முற்பகல் 11.30 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சந்தேக நபர் கஞ்சா 1 கிராம் 590 மில்லகிராம் மற்றும் புகையிலை 56 கிராம் 150 மில்லிகிராமினை சிறைச்சாலைக்குள் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்னறுவ பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

