யாழில் சுமதியை கொடூரமாக கற்பழித்து கொன்ற ஆமிக்காரனுக்கு ஜனாதிபதி அனுரா உயர் பதவி வழங்கி கௌரவிப்பு!!
செம்மணி தொடர்பான முழுமையான விடயங்களை நாம் தொடர்களாக தந்துள்ளோம். அவற்றை கீழே உள்ள பதிவில் அழுத்திப் பார்வையிடலாம்
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
செம்மணி புதைகுழி சூத்திரதாரிகளில் ஒருவரான பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தனவை (Sachindra Wijesiriwardane-இராணுவ இலக்கம் 62421) இராணுவ தலைமையக Directorate of Movement யின் 34 வது பணிப்பாளராக திரு அனுரா குமார திஸநாயக்க நியமித்திருக்கின்றார். செம்மணி புதை*குழி தொடர்பாக மார்ச் 13, 2000 அன்று, கைது செய்யப்பட்ட பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன யாழ்ப்பாண நீதிமன்றந்தால் (வழக்கு எண் B 28/99) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
அதாவது செம்மணி புதை*குழி மற்றும் பா*லியல் வன்கொடுமைகள் ,கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் என லலித் ஹேவா (61834), சசிக பெரேரா (62188), யடகம (63088) ஆகியோரோடு சசிந்திர விஜேசிரிவர்தனவும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு இருந்தார்.ஆனால் அதே ஆண்டு ஜூலை 06 அன்று கொழும்பில் மேல்முறையீடு செய்ததன் ஊடக (H.C.B.A. 29/2000) பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன உட்பட்டோருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் செம்மணி புதைகுழி வழக்கையும் முற்று முழுமையாகவே முடக்கபட்டிருந்தது
குறிப்பாக கிரிஷாந்தி படுகொலை தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே அடையாளம் காட்டிய இராணுவ அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன செம்மணியில் பணியாற்றிய பொது லெப்டினன்ட் தர அதிகாரியாக பணியிலிருந்தார்.
செம்மணியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இலகு காலாட் படைப்பிரிவை சேர்ந்த பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன கைது செய்யப்பட்ட போது கப்டன் தர அதிகாரியாக பணியிலிருந்தார். முல்லைத்தீவு இராணுவ முகாம் அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றிய பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன பனகொட இராணுவ முகாமிலும் பணியில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.
விசேடமாக 2017 ஆம் ஆண்டு லெப்டினண்ட் கேணல் தர அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார் (Effect from 03.05.2011)
அதே போல 2022 ஆம் ஆண்டு கேணல் தர அதிகாரியாக (Effect from 22.11.2018) பதவி உயர்வு பெற்று இருந்தார்
இது மாத்திரமின்றி கடந்த ஆண்டு பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன அவர்களை பிரிகேடியர் தர நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருந்தார் (Effect from 03.05.2021) அன்மையில் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான நீதிமன்ற அமர்வில் பாதிக்கப்பட்டோர் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளில் ஒருவரான திரு சுமந்திரன் அவர்கள் பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன உட்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்ட வழக்கை (B 28/99) மீண்டும் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அதே போல பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன உட்பட அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.ஆனால் ஜேவிபி ஆட்சியாளர்கள் ஒருபுறம் செம்மணி புதைகுழிக்கு நீதி பெற்று தருவதாக வாக்குறுதி அளித்திருக்கும் சம நேரத்தில் மறுபுறம் பிரதான கோரமான செம்மணி புதைகுழியின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தனவை இராணுவ தலைமையகத்தில் உயர் பதவியில் நியமித்திருக்கின்றார்கள். சட்டம் எல்லோருக்கும் சமன் என பேசும் ஜேவிபி முற்றிலும் எம்மை பேயராக கருதி பேயாட்சி செய்ய முற்படுகின்றார்கள்.