முன்னாள் ஜனாதிபதி ரணில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!!
சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் ரணில்.
கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளை சேர்ந்த 2 இராஜதந்திரிகள் அரச மேலிடத்துடன் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது..
அத்துடன் ரணிலுக்கு மூன்று வேளை உணவும் வீட்டிலிருந்தே கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர் என்றும் தெரியவருகின்றது.

