பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதிகளில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பாரிஸில் கொள்ளை சம்பவம் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடைகளை நடத்தும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும்,சந்தேகத்திற்கிடமான மர்ம நபர்கள் அல்லது நெருக்கமாக செயற்படுபவர்கள் தங்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாரிஸ் பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் வீட்டில் இருந்து €100,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேகநபர் வர்த்தகருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)